கதறும் பெற்றோர்கள்.. இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது 'ஃப்ரீ ஃபயர்' கேம் - கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

 

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட பிரபல ஆன்லைன் மொபைல் கேமான 'ஃப்ரீ ஃபயர்' (Free Fire), சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் 'Free Fire India' என்ற பெயரில் இந்தியாவில் மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கரீனா நிறுவனம் இந்திய அரசு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு, இந்திய விளையாட்டாளர்களுக்காகப் புதிய கிராபிக்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இச்செயலியைப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த கேமை விளையாடப் பெற்றோர் அல்லது காப்பாளரின் மொபைல் எண் சரிபார்ப்பு மற்றும் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கேமிற்குள் பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்கச் சிறுவர்கள் செலவிடும் பணத்திற்குச் குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் படிப்பைப் பாதிக்காத வகையிலும், அடிமையாவதைத் தடுக்கும் வகையிலும் புதிய நேர வரம்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன:

18 வயதுக்கு மேற்பட்டோர் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும். 18 வயதுக்குட்பட்டோர் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவர். தொடர்ச்சியாக விளையாடுவதைத் தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளிகளில் "ஓய்வு இடைவேளை நினைவூட்டல்கள்" திரையில் தோன்றும்.

மேலும், இந்தியப் பயனர்களைக் கவரும் வகையில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு இந்திய அம்சங்களும் கேமிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதால் இதன் மீதான தடை நீக்கப்பட்டு இந்திய இளைஞர்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பைப் பெற்று வருகிறது.