பிரதமர் மோடி தலைமையில் பாரிஸ் AI உச்சிமாநாடு!
இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெறும் AI செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பயணம் மூலம் பிரான்ஸ் – இந்தியா உறவை மேம்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உடன் இணைந்து துணையாக AI மாநாட்டை தலைமை தாங்குவதற்கும் பிரதமர் மோடி சென்று மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த AI மாநாட்டில் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ், சீன துணைப் பிரதமர் ஜாங் குவோகிங், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உட்பட பன்னாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
2023ல் இங்கிலாந்தில் AI உச்சி மாநாடு நடைபெற்றது.அடுத்து கடந்த வருடம் மே மாதம் தென் கொரியாவில் சியோலில் நடைபெற்றது. அதன் நீட்சியாக இந்த வருடம் பிரான்ஸ் தலைமையில் பாரிஸில் AI உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
பாரிஸ் AI உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கமாக, உலகளாவிய பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட AI செயல்முறையை வழங்குதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த AI-ஐ உருவாக்குதல் மற்றும் பயனுள்ள செயற்கை நுண்ணறிவு கொண்ட உலகளாவிய நிர்வாகத்தை உறுதி செய்தல் ஆகும்.
இன்று மாலை பாரிஸ் செல்லும் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்க இருக்கிறார். பின்னர் இன்று இரவு எலிசி அரண்மனையில் ஜனாதிபதி மக்ரோன் வழங்கும் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதனையடுத்து 2 நாள் AI மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த AI மாநாடு பற்றி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ” AI தொழில்நுட்பத்தில் இந்தியாவும் பிரான்ஸும் முன்னணியில் உள்ளன. அதேநேரம் அமெரிக்காவும் சீனாவும் AI தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிவிட்டன. அதற்கு அடுத்த இடங்களில், பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி ஆகிய பிற நாடுகள் உள்ளன. எனவே, AI தொழில்நுட்ப வளர்ச்சியில் நாங்கள் இணைந்து பணிபுரிய விரும்புகிறோம்.” என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியும் ஜனாதிபதி மக்ரோனும் AI மாநாட்டிற்கு பிறகு பிப்ரவரி 12ம் தேதி இரு நாட்டு பிரதிநிதிகளுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்களை நடத்துவார்கள். இருநாட்டு தலைவர்களும் போர் கல்லறைக்குச் சென்று முதலாம் உலகப் போரில் இந்திய வீரர்கள் செய்த தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இருவரும் கூட்டாக மார்சேயில் உள்ள புதிய இந்திய துணைத் தூதரகத்தைத் திறந்து வைப்பார்கள். மேலும் சர்வதேச வெப்ப அணுசக்தி சோதனை உலை அமைந்துள்ள கடாஷையும் பார்வையிடுவார்கள்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!