undefined

 வீட்டு வாசல்களில் பார்க்கிங்.? உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு!

 
 

தமிழகத்தில் பலரும் தங்களுடைய வண்டி வாகனங்களை வீட்டு வாசலில் தான் நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல பகுதிகளில் பழைய காலத்து வீடுகளில் பார்க்கிங் வசதிகள் இல்லாததால் இவைகளை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இவைகளுக்கு ஒரு முடிவு கட்டும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது . 

சென்னை அண்ணாநகரில், என் பிளாக்கில், எந்த உரிமமும் இல்லாமல், தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் வாகனங்கள் நிறுத்தியுள்ளதாகவும், கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அண்ணாநகரைச் சேர்ந்த கிஷோர் என்பவர் பொதுநலவழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் குறிப்பிட்ட  பகுதியில் நோ  பார்க்கிங் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.இதனையடுத்து சென்னையில்  குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தியிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!