இந்தோனேசியாவில் நடுக்கடலில் பயணிகள் படகில் திடீர் தீ விபத்து: ஒருவர் பலி; 200 பேர் மீட்பு!

 

இந்தோனேசியாவில் 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் படகில் நடுக்கடலில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/1lZKd6sx3VU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/1lZKd6sx3VU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலி மாகாணத்தின் படங்பாய் துறைமுகத்தில் இருந்து லெம்பக் நகரை நோக்கி 173 பயணிகளுடன் படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. லெம்பக் ஜலசந்தி பகுதியில் படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகப் படகில் திடீரென பயங்கரத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மீட்புக் குழுவினரின் விரைவான நடவடிக்கையால் படகில் இருந்த 172 பயணிகள் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும், இந்த துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படகு தீப்பிடித்து எரிந்ததற்கான முதன்மை காரணம் என்ன என்பது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.