சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளி அடித்துக் கொலை!

 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், சக நோயாளியால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்ள கிரிமினல் வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஜாஹீர் என்பவருக்கும், அங்கிருந்த மற்றொரு நோயாளியான அரவிந்த் சாமி என்பவருக்கும் இடையே திடீரெனத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, அரவிந்த் சாமி ஆத்திரமடைந்து ஜாஹீரின் கண்ணில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜாஹீர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி ஜாஹீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட அரவிந்த் சாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.