259 பேர் பட்டாசு விபத்தில் பலி... 6 ஆண்டுகளில் அதிர்ச்சி தரும் புள்ளி விபரம்!
Sep 5, 2026, 17:40 IST
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2021-ல் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 51 பேர் பலியாகினர் மற்றும் 47 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பயங்கரமான பட்டாசு ஆலை வெடி விபத்தில் மட்டும் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து கடந்த 2022-ல் நடந்த விபத்துகளில் 22 பேரும், 2023-ல் 40 பேரும், 2024-ல் 35 பேரும் பட்டாசு ஆலை விபத்துகளில் பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் பல்வேறு விபத்துகளில் சிக்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நடப்பாண்டில் நேற்றுமுன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 14 பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் தொடர் விபத்துகளில் சிக்கி இதுவரை 47 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.