மக்கள் அதிர்ச்சி... பாகிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!
Oct 27, 2026, 10:00 IST
பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி காலை 6:06 மணியளவில் பதிவான முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவானது. அதனைத் தொடர்ந்து காலை 11:15 மணியளவில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 77 கி.மீ ஆழத்தில், 26.849° N அட்சரேகையிலும் 68.767° E தீர்க்க ரேகையிலும் மையம் கொண்டிருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
நிலநடுக்க அதிர்வுகளால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் உயிர்ச்சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.