“மக்கள் துரோகத்தின் அடையாளமாகத் தான் பார்ப்பார்கள்” தவெக வேட்பாளரை விளாசிய பிரேமலதா விஜயகாந்த்!
Sep 30, 2026, 16:45 IST
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலைக் குறிப்பிட்டு, மக்கள் உங்களை ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளமாகவே பார்ப்பார்கள் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலைக் கடுமையாகச் சாடினார். உங்களால் சொந்த ஊரில் கூட முகத்தைக் காட்டி வாக்கு சேகரிக்க முடியவில்லை என்றும், மக்கள் உங்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தங்களை நம்பி உழைத்த கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு வேறொரு கட்சிக்குத் தாவுபவர்களை மக்கள் எப்போதுமே துரோகத்தின் அடையாளமாகத்தான் பார்ப்பார்கள் என்றும், அந்த வகையில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.