அம்மா உணவகத்தில் பரபரப்பு: உணவு கேட்ட இளைஞர் மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றிய ஊழியர்  !

 

 

 சென்னை பெரம்பூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், உணவு கேட்டு வந்த இளைஞர் மீது ஊழியர் ஒருவர் கொதிக்கும் சாம்பாரை முகத்தில் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஊழியராகப் பணியாற்றி வரும் உதயபானு என்பவரே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர், உணவகத்தில் சமையல் வேலைகள் முழுமையாக முடிவதற்கு முன்பே தினமும் வந்து உணவு கேட்டுத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் இன்றும் சமையல் தயாராகும் முன்பே அவர் உணவு கேட்டதால், உதயபானுவிற்கும் ராஜேஷிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த உதயபானு, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து ராஜேஷின் முகத்தில் ஊற்றியுள்ளார். பலத்த தீக்காயமடைந்த ராஜேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பூர் போலீசார், விசாரணை நடத்தி ஊழியர் உதயபானுவைக் கைது செய்தனர். இதுபோன்ற முக்கியச் செய்திகளை தினமாலை.காம் தளத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.