பகீர்... தூங்கி எழுந்த போது உடல் முழுவதும் நீலநிறமாக மாறிய விசித்திரம்! 

 

புதிய மெத்தை  விரிப்பைப் பயன்படுத்திய நபர் ஒருவர் உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய விசித்திர சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் 42 வயது டொமி லிஞ்ச் என்பவருக்கு நண்பர் ஒருவர் அடர் நீல நிற மெத்தை  விரிப்பை பரிசாக வழங்கியுள்ளார். அதைத் துவைக்காமல் அப்படியே பயன்படுத்தி தொடர்ந்து இரண்டு இரவுகள் அதில் தூங்கியதாக  கூறப்படுகிறது.

மூன்றாவது நாள் பிற்பகல் அவர்  தூங்கி  எழுந்தபோது அவரது உடல் உச்சி முதல் உள்ளங்கால் வரை நீல நிறமாக மாறியிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக எண்ணிய நண்பர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.   முதலில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கலாம் என சந்தேகித்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மருத்துவர்கள் ஆல்கஹால் கலந்த துணியால் அவரது கையை துடைத்தபோது துணியும் நீலநிறமாக மாறியது. அதன்பிறகே மெத்தை விரிப்பில் இருந்த சாயம் உடலுக்கு ஒட்டியிருப்பதை உறுதி செய்தனர்.  வீட்டிற்கு திரும்பிய பிறகும் அந்த நீல நிறம் முழுமையாக மறைய ஒரு வாரம் ஆனதாக டொமி லிஞ்ச் தெரிவித்துள்ளார். புதிய துணிகளை பயன்படுத்தும் முன் அவற்றைத் துவைக்க வேண்டும் என்பதை நாம் பாடமாக கொள்ள வேண்டும்.