undefined

10 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. 45 தையல்கள் போட்டு சிறுமி கவலைக்கிடம்...!!  

 

நாய் கடித்ததால் 10 வயதுச் சிறுமிக்கு சமீபத்தில் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையில் 45 தையல்கள் போடப்பட்டன.

மும்பை அந்தேரி (கிழக்கு) ஹவுசிங் சொசைட்டியில் வசித்து வருபவர்கள்  ரூபேஷ் மற்றும் ஜிங்சிங் குமார் தம்பதி. இவர்களுக்கு பத்து வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் இவர்களின்  பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஜெர்மன் ஷெப்பர்டின்  நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். 10 வயது மகளை நாய் கடுமையாக கடித்தால் பாதிக்கப்பட்டாள். குழந்தையின் பெற்றோர், நாய் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

நாய் உரிமையாளர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகும் மருத்துவர்கள், சிறுமியின் உடலில் 45 தையல்கள் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தையின் நிலை அறிந்து வளர்ப்பு நாயின் உரிமையாளார் மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இந்த வளர்ப்பு நாயானது ஏற்கெனவே மூன்று முறை மற்றவர்களை கடித்துள்ளது என்றும், இது குறித்து நாயின் உரிமையாளாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாததால், இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாயின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.