முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை - வைரலாகும் படங்கள்!
Sep 4, 2026, 08:05 IST
வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு புதிய வடிவமைப்பு கொண்ட விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் விஜய் செய்த ஒரு குறிப்பிட்ட சைகை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
அந்தச் சைகை காட்சியின் அடிப்படையைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
இந்தச் சிலைகள் உண்மையானவையா அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்களா என்பது குறித்து இதுவரை எந்தவித உறுதியான தகவலும் வெளியாகவில்லை.