நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 4  வயது சிறுமி நள்ளிரவில் மாயம்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்! 

 

 

விஜயவாடாவில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்த தம்பதியினர், தமது மகளுடன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை இரண்டரை மணியளவில் சிறுமியைக் காணாமல் போனதை உணர்ந்து அவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

allowfullscreen

வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அந்தப் பதிவுகளில் இருவர் சிறுமியை ஒரு ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வது உறுதியாகியுள்ளது.

காணாமல் போன சிறுமியை மீட்கவும் சந்தேக நபர்களைப் பிடிக்கவும் மூன்று தனிப்படை காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.