undefined

பிஎம் கிசான் ₹2,000 கிடைப்பதில் சிக்கல்?! உடனே இதை செக்  பண்ணுங்க!

 

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 22-வது தவணைத் தொகையான ₹2,000 எப்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. உங்கள் வங்கி கணக்கில் உடனே இதைச் செய்யலைன்னா பணம் வரவு வைக்கப்படுவதில் சிக்கல் எழக்கூடும். 

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 நிதியுதவி, மூன்று தவணைகளாக தலா ₹2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 21-வது தவணை 2025 நவம்பர் மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 22-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

பொதுவாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்தத் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026 பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் (ஹோலி பண்டிகைக்கு முன்பாக) இந்தப் பணம் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமதத்திற்கான காரணம்: மாநில அரசுகள் மூலம் நிலப் பதிவேடுகளைச் சரிபார்த்தல் மற்றும் பயனாளிகளின் பட்டியலைத் தணிக்கை செய்தல் போன்ற தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருவதால், ஒரு சிலருக்குப் பணம் வருவதில் சிறிய தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கணக்கிற்குப் பணம் வருவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க, பின்வரும் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

பிஎம் கிசான் இணையதளத்தில் (pmkisan.gov.in) உங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி e-KYC செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது செய்யப்படாவிட்டால் தவணைத் தொகை நிறுத்தப்படும்.

 உங்களது வங்கி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் DBT (Direct Benefit Transfer) வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும். புதிய விதிமுறைகளின்படி, சில மாநிலங்களில் விவசாயி அடையாள அட்டை (Farmer ID) பதிவேற்றம் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்களது பெயர் தகுதியுள்ளோர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்களே ஆன்லைனில் சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: pmkisan.gov.in அதில் 'Know Your Status' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்களது பதிவு எண் (Registration Number) அல்லது மொபைல் எண்ணைப் பதிவிட்டு, திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். இப்போது உங்களது முந்தைய தவணைகள் மற்றும் அடுத்த தவணையின் நிலை குறித்த விவரங்கள் திரையில் தோன்றும்.

பணம் வரவில்லை என்றாலோ அல்லது பதிவில் ஏதேனும் தவறு இருந்தாலோ, மத்திய அரசின் கட்டணமில்லா உதவி எண்ணான 1800 115 526 அல்லது 155261 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.