சென்னையில் பிரதமர் மோடி... அக்.11ல் இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்!
Oct 4, 2026, 10:20 IST
பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ம் தேதி சென்னை வரவுள்ள நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை அவர் நேரில் திறந்து வைக்க உள்ளார்.
சென்னை வருகை தரும் பிரதமர் மோடி, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் அவர் பயணமும் மேற்கொள்ள உள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இசை ஆராய்ச்சி மையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள இந்த மையத்தை அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.