undefined

வேலுநாச்சியார் பிறந்தநாள்: பிரதமர் மோடி தமிழில் புகழாரம்!
 

ராணி வேலுநாச்சியார் மகளிரின் சக்தியை உணர்த்தியவர் என மோடி புகழாரம் 
 
 

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளின் பங்கு என்று எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் வேலுநாச்சியார் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில அரசுக்கு எதிராக போரிட்ட  இந்தியாவின் முதல் வீர பெண்மணி ராணி வேலுநாச்சியார் ஆவார். தமிழத்தின் வீரமங்கையான ராணி வேலுநாச்சியாரின் 282 வது பிறந்ததினம், இன்று தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதை முன்னிட்டு பிரதமர் மோடி, ராணி வேலுநாச்சியரின் பெருமையை போற்றும் வகையில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்’ என தமிழிலேயே பதிவிட்டுள்ளார்.