undefined

நாளை மும்பையின் 2வது சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

 

நாளை மதியம், நவி மும்பையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த சர்வதேச விமான நிலையத்தின் பங்குகளில் 74 சதவீதம் அதானி குழுமமும், 26 சதவீதம் மராட்டிய அரசும் வைத்துள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையம் செயல்பட கடந்த 30ம் தேதி மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை நாளை மதியம் 2.40 மணிக்கு விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதன் மூலம் மும்பை பெருநகரில் செயல்பாட்டிற்கு வரும் 2வது சர்வதேச விமான நிலையம் என்ற பெருமையை நவி மும்பை விமான நிலையம் பெறுகிறது.

இந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகளும், 3.2 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட உள்ளன. இது ஆசியாவில் விமான போக்குவரத்தின் முக்கிய மையப்புள்ளியாக திகழ உள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?