திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க பிரதமர் மோடி கோரிக்கை!
Aug 31, 2026, 18:20 IST
உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருக்குறளின் பெருமை குறித்துப் பேசினார்.
உலகப் பொதுமறையான திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுமாறு அந்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் பிரதமர் மோடி அன்பான வேண்டுகோள் விடுத்தார்.
ஆன்மிகம், தத்துவம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்வியல் ஞானமும் நிறைந்த திருக்குறள் மிகச்சிறந்த ஆற்றல் கொண்ட ஒரு தனித்துவமான படைப்பு என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தின் 80-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்த மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வது, அங்குள்ள அறிவுச் செல்வத்தை மேலும் செழுமைப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.