அக்.2 வரை பிரதமர் மோடியின் நினைவுப் பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் மூலம் விற்பனை!
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகளை ஆன்லைன் மூலமாக ஏலம் விடும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் நினைவுப் பரிசுகளின் மின்னணு ஏலமானது pmmementos.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வரை தொடரும்.
இம்முறை ஏலத்தில் தமிழ்நாட்டின் உன்னத கலாச்சாரப் பாரம்பரியம், ஆன்மீகம், கலை, கைவினைத் திறன்கள் மற்றும் விளையாட்டு சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மொத்தம் 31 நினைவுப் பரிசுகள் பிரத்யேகமாக இடம்பிடித்துள்ளன.
பின்னணி: பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் அலுவல் ரீதியான பயணங்களை மேற்கொள்ளும்போது அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மதிப்புமிக்க நினைவுப் பரிசுகள் இவ்வாறு மத்திய அரசால் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஏலம் விடப்படுவது வழக்கம்.