undefined

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பாமக ராமதாஸ்!

 

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்பினார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக கடந்த 5ம் தேதி ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் ராமதாஸுக்கு பரிசோதனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து முழு உடல் பரிசோதனையும் நடைபெற்றது. இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் இன்று வீடு திரும்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை முதல்வர் மு.க. ஸ்டாலின், சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அன்புமணி உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?