“பாரதி மறைந்த நாளில் சாலமன் பாப்பையா மறைவு” - கவிஞர் வைரமுத்து உருக்கம்!

 

புகழ்பெற்ற தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளம் மூலமாக உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியார் மறைந்த அதே நாளான செப்டம்பர் 11-ஆம் தேதியன்று சாலமன் பாப்பையாவும் மறைந்திருப்பது தமிழுக்கு நேர்ந்த மிகப்பெரிய பேரிழப்பு என்றும், அன்றைய தினம் தமிழுக்கு நல்ல நாள் இல்லை போலும் என்றும் அவர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

கல்லூரிகளின் வகுப்பறைகளுக்குள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்ட செந்தமிழைக், தனது எளிய பேச்சாற்றலால் பாமர மக்களின் கடைவீதிக்கும் கொண்டு சேர்த்த பெருமை சாலமன் பாப்பையாவையே சாரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களைச் சிரிக்க வைத்துக் கொண்டே சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணரான அவரது மறைவால் மதுரை மாநகரத்திற்கே ஒரு வெறுமை வந்துவிட்டதாகவும், அவரது நாற்காலியை இனி யாராலும் எப்போதுமே நிரப்ப முடியாது என்றும் வைரமுத்து உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.