கொடூரம்... கட்டிடத் தொழிலாளி விஷம் கொடுத்து படுகொலை!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேட்டை தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது கட்டிட தொழிலாளி விஜய். இவர் அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் இல்லாத நேரங்களில் விஜய் அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தவறான பழக்கம் அப்பெண்ணின் 68 வயது தந்தை தேவராஜிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை எச்சரித்தும் விஜய் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்ததால், தேவராஜ் தனது 17 வயது பேரனுடன் இணைந்து விஜய்யைத் தீர்த்துக் கட்ட அதிரடித் திட்டம் தீட்டினார். அதன்படி இரவில் கள்ளக்காதலியின் வீட்டை விட்டு வெளியேறிய விஜய்யைப் பின் தொடர்ந்த மர்ம கும்பல், அரிவாளால் அவரது காலில் வெட்டியதுடன் வாயில் விஷத்தை ஊற்றிக் கொடூரமாகப் படுகொலை செய்தது.
விஜய்யின் உடல் தோப்பு ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டதை அடுத்துச் சூனாம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலையில் ஈடுபட்ட தேவராஜ் மற்றும் அவரது 17 வயது பேரனான பள்ளி மாணவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் தாத்தா சிறையிலும், 17 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.