ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு தொடர்புடைய 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை!
போக்சோ சட்டத்தின் கீழ் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உட்பட 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.சாலையில் இயங்கி வரும் ஜெம் நிறுவனத்தின் அலுவலகத்திலும் போலீசார் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். பாலியல் வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க பல கோடி ரூபாய் லஞ்சம் மற்றும் செட்டில்மெண்ட் செய்யப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், வீரமணிக்குத் தொடர்புடைய 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.