ராகுல் காந்தி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடைபெற்ற நிகழ்வு மற்றும் சடங்குகள் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகள் மற்றும் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மீது எஸ்சி, எஸ்டி (வண்கொடுமை தடுப்புச்) சட்டம் மற்றும் பாரதிய நியாய சகிதா விதிகளின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூகக் குழுக்களுக்கு இடையே பகையைத் தூண்டுதல், அமைதியைக் குலைத்தல் மற்றும் குறிப்பிட்ட மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செயல்படுதல் போன்ற சட்டப் பிரிவுகளின் கீழும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.