நடுரோட்டில் போக்குவரத்து போலீஸ்காரர் மீது சராமாரி தாக்குதல்... பரபரப்பு வீடியோ!

 

மராட்டிய மாநிலம் நாக்பூரில் போக்குவரத்துப் பிரிவு போலீசாகப் பணியாற்றி வருபவர் 35 வயதுடைய குர்னால் சிங் ஆவார். இவர் கடந்த 28 ஆம் தேதி தனது காதலியுடன் காரில் மன்கப்பூர்சவுக் பகுதிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் சிலர், போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி குர்னால் சிங்கின் கார் மீது பலமாக மோதியுள்ளனர்.

Nagpur - A shocking case of road rage has come to light in Nagpur, where a group of youths assaulted a policeman after he objected to their reckless stunt driving on the road.The victim, identified as Kunal Singh, is a traffic policeman attached to the MIDC Traffic Branch. Kunal… pic.twitter.com/AGUjtO4eXi

— NextMinute News (@nextminutenews7) July 3, 2026

இதனால் அதிர்ச்சியடைந்த குர்னால் சிங் காரைச் சாலையோரம் நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். உடனே ஆத்திரமடைந்த அந்த மோட்டார் சைக்கிள் கும்பல், தங்களின் வாகனங்களில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை எடுத்து நடுரோட்டில் வைத்துப் போலீஸ்காரரைச் சரமாரியாகத் தாக்கினர். இந்த விபரீதத் தாக்குதலில் குர்னால் சிங் உடல் முழுவதும் பலத்த ரத்தக் காயமடைந்து உயிருக்குப் போராடியுள்ளார்.

இதைக் கண்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசரமாக அனுமதித்தனர். இக்கொடூரச் சம்பவம் குறித்து நாக்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 14 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.