காவல் நிலையத்தில் பணத்தை திருடிய போலீஸ்காரர்... பெரும் பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலையத்தில் பணிநிமித்தமாகச் சென்ற போலீஸ்காரர் செல்வகுமார், அங்கிருந்த சக போலீசாரிடம் இருந்து பதினைந்தாயிரம் ரூபாயைத் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணைக்கட்டு காவல் நிலையத்தின் ஓய்வறையில் பெண் போலீஸ்காரர் வைத்திருந்த ரூ5000ம், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) வைத்திருந்த ரூ10000ம் திருடப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் போலீஸ்காரர் செல்வகுமார்தான் சக காவலர்களின் பணத்தைத் திருடியது உறுதியானது. இதனையடுத்து, திருட்டுச் செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் செல்வகுமாரை ஆயுதப்படைக்கு மாற்றி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையத்திற்குள்ளேயே காவலரே சக போலீசாரின் பணத்தைத் திருடிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.