ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு... முக்கிய அறிவிப்பு!
தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இம்முறை பொங்கல் பரிசுத் தொகுப்பில் நிச்சயம் ரொக்கப்பரிசும் சேர்க்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறது. பொதுவாக பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் இதில் அடங்கும்.
2026ல் முக்கிய மாற்றம்:
சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, பொங்கல் பரிசு ரொக்கப்பணமாக வழங்கப்படுமா என்பதை ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
யாருக்கு பரிசு கிடையாது?
முன்னுரிமை அட்டை (Priority Card – அரிசி): அனைத்து பொருட்களும் கிடைக்கும்
முன்னுரிமை அட்டை (அந்தியோதயா அன்ன யோஜனா – அரிசி): 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்
முன்னுரிமையற்ற அட்டை (அரிசி): அனைத்து பொருட்களும் கிடைக்கும்
முன்னுரிமையற்ற அட்டை (சர்க்கரை): அரிசி தவிர அனைத்து பொருட்களும் கிடைக்கும்
பொருளில்லா அட்டை (Non-commodity Card): எந்தப் பொருளும் வழங்கப்படாது; இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படும்
முக்கிய வழிமுறைகள்:
1. பயனாளிகள் டோக்கன் பெற்றிருக்க வேண்டும்
2. டோக்கன் இல்லாதவர்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று உடனடியாக பெற வேண்டும்
3. டோக்கன் இருந்தால் மட்டுமே பரிசு வழங்கப்படும்
குறிப்பு: அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!