பொங்கல் பரிசுத்தொகை ரூ.3,000.. முன்கூட்டியே வழங்கக் கோரி பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்த கோரிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளன.
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்க வேண்டும் என்று குடும்பத் தலைவிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையுடன், மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐயும் பண்டிகைக்கு முன்பாகவே சேர்த்து ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரொக்கப் பரிைசத் தொகையைப் பரிமாறும் முறைக்குப் பதிலாக, முந்தைய திட்டங்களைப் போலன்றி இம்முறை பொங்கல் பரிசுத் தொகையையும் நேரடியாகத் தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.