பழனி கோவில் சொத்துகளைப் பாதுகாக்க புதிய ஆய்வுக் குழு: பொன்மணி ஐஏஸ் தலைமையில் ஆய்வு!
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்டறிந்து பாதுகாப்பதற்காக, பொன்மணி ஐஏஎஸ் தலைமையிலான புதிய ஆய்வுக் குழுவினர் பழனி தேவஸ்தானத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் திருக்கோவிலின் தற்போதைய வருவாய் நிலவரம், அரசு கணக்கில் வராத கோயில் சொத்துகள் மற்றும் சட்டவிரோதமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆலோசனையைத் தொடர்ந்து, பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களைப் புதிய ஆய்வுக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுச் சரிபார்த்தனர்.
ஆய்வுக்குப் பின் பேசிய பொன்மணி ஐஏஎஸ், திருக்கோவிலுக்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்களும் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் அனைத்துச் சொத்துகளும் சட்டப்படி விரைவாக மீட்டெடுக்கப்பட்டுத் திருக்கோவில் வசமாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.