நாளை போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு... இந்தியா சார்பில் திரௌபதி முர்மு வாடிகன் புறப்பட்டார் !
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை ஏப்ரல் 21ம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டின் தலைவர்கள், அதிபர்கள் இரங்கல் தெரிவித்தனர்.வாடிகனின் 266வது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் வயது 88. இவர் நீண்ட நாட்களாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோரும் சென்றுள்ளனர்.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு புனித பீட்டா் சதுக்கத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகழ்வில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா சார்பில் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தில்லியில் இருந்து வாடிகனுக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டு அன்றைய தினம் இந்தியா முழுக்க துக்கம் அனுசரிக்கப்படும். இதனையடுத்து நாடு முழுவதிலும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!