சாலை விபத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் ரிங்கு ராஜ்வாடா மரணம்!
Sep 9, 2026, 20:20 IST
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புறப் பாடகர் ரிங்கு ராஜ்வாடா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 31.
ரிங்கு ராஜ்வாடா மதுரா மாவட்டம் பல்தேவ் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவான வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.