70 முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்ட பிரபலம் உயிரிழப்பு!
Sep 10, 2026, 15:00 IST
சீனாவைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் யிங்யிங் (24), உணவுகளை அதிக அளவில் சாப்பிடும் வீடியோக்களை 'டௌயின்' (Douyin) என்ற தளத்தில் வெளியிட்டு வந்தார். இவரை சுமார் 12 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.வீடியோக்களுக்காக அதிகளவு உப்புடன் சேர்த்து ஒரே நேரத்தில் 70 முட்டைகளை அவர் சாப்பிட்டதே அவரது அகால மரணத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விபரீத உணவுக் பழக்கத்தால் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி அவரது உடலில் பொட்டாசியம் அளவு கடுமையாகக் குறைந்துள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 17-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.