undefined

பிரபல தமிழ் பட நடிகை திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

 

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் நடிகை அங்காடி தெரு சிந்து. புற்றுநோய் பரவல் காரணமாக மார்பகங்கள் அகற்றப்பட்ட பின்னர், அது குறித்தும் பத்திரிக்கைகளில் பேட்டியளித்து, விஷால் போன்ற நடிகர்கள் உதவிக்கரம் நீட்டினால், தன்னால் மீண்டு வர முடியும் என்று பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அதிகாலை 2.15 மணிக்கு நடிகை அங்காடி தெரு சிந்து காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதும், சிகிச்சைக்கு தன்னிடம் பணம் இல்லை. நடிகர் சங்கம் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று வெளிப்படையாகவே பண உதவி கோரினார். தன்னுடைய உறவினர்கள் யாரும் உதவவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார் நடிகை சிந்து.

புற்றுநோய் பரவல் காரணமாக ஒரு மார்பகம் முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில், இரண்டாவது மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவி, மிகுந்த வேதனையை அனுபவித்து வருவதாக சமீபத்திய பேட்டியில் கூறியிருந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது இறுதிசடங்கு இன்று மாலை சென்னையில் நடைப்பெறுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!