அட... 24 மணி நேரத்தில் தபால், 48 மணி நேரத்தில் பார்சல் சேவை... தபால் துறை அதிரடி!
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலம் தபால் சேவை 24 மணிநேரத்திலும் வழங்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, “அஞ்சல் துறை 24 மணிநேரத்துக்குள் தபால் சேவையையும், 48 மணிநேரத்துக்குள் பார்சல் சேவையையும் வழங்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த புதிய சேவை ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும். மேலும், 2029 ம் ஆண்டுக்குள் அஞ்சல் துறையை ஒரு செலவுக்கூட்டிய துறையாக இல்லாமல், லாபம் தரும் துறையாக மாற்றுவது எங்கள் குறிக்கோள்” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!