இன்று முதல் அமெரிக்காவுக்கு தபால் பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்!
இன்று முதல் அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் பார்சல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அமெரிக்காவுக்கு தபால் பார்சல் சேவை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய தபால் துறை வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவுக்கான அனைத்து வகையான சர்வதேச தபால் சேவைகளையும் இன்று முதல் மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய கட்டண விதிகளின்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் பார்சல்களுக்கு அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தபால் சேவைகளுக்கு கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல கூடுதல் தயாரிப்பு வரிகள் விதிக்கப்பட மாட்டாததால், ஏற்றுமதி செய்பவர்களின் செலவு கணிசமாக குறையும் எனவும் தபால் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சிறு தொழில் முனைவோர், கைவினைஞர்கள் மற்றும் மின்வணிக ஏற்றுமதியாளர்கள் குறைந்த செலவில் தங்கள் பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் புதிய வரி அமைப்பு அமல்படுத்தப்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தபால் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!