பொதுமக்கள் அதிர்ச்சி - நாளை முதல் திருவண்ணாமலையில் 7 மணி நேரம் வரை மின் தடை அறிவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 23 துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (அக்டோபர் 6) முதல் இந்த மாத இறுதி வரை குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி அக்டோபர் 31-ம் தேதி வரை இப்பட்டியலில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும். இப்பணிகள் நடைபெறும் காலக்கட்டங்களில் காலை முதல் பிற்பகல் வரை சுமார் 7 மணி நேரம் வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தொடர்பான புகார்கள் மற்றும் மின்தடை குறித்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்கத் தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணிற்கு "Hi" எனச் செய்தி அனுப்பிப் புகார்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.