தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மின்தடை அறிவிப்பு!

 

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 22) தமிழகத்தின் 11 மாவட்டங்களில் குறிப்பிட்ட முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. துரிதமான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை கோயம்புத்தூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், தருமபுரி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது:

பராமரிப்புப் பணிகள் விரைவாக முடிவடையும் பட்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.