பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 5,000 நிதியுதவி!

 

மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின் மூலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பெண்களின் முதல் கர்ப்ப காலத்தில் அவர்களின் நல்வாழ்வையும், முறையான ஊட்டச்சத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை இந்தத் திட்டம் முதன்மையாகக் கொண்டுள்ளது.

இந்த நிதி ஊக்கத்தொகை தாய் மற்றும் சேயின் ஆரம்பகால ஆரோக்கியத்தையும், அவசியமான மருத்துவப் பராமரிப்பையும் முழுமையாக உறுதி செய்கிறது. இத்திட்டம் குறித்த மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ள https://pmmvy.wcd.gov.in/151 என்ற அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தைப் பார்வையிடலாம்.