undefined

”எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை “... பிரகாஷ்ராஜ் சர்ச்சை பேச்சு!

 

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிரான கருத்துக்களால்  சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். தற்போது இந்தியா முழுவதும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் எனப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும்   வகையில்  ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை... 400 இடங்களை வென்று விடுவோம் எனப் பேசுவது திமிர்த்தனம் எனக் கூறியுள்ளார்.  


  ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை .  400 இடங்களுக்கு மேல் வெற்றி வருகிறது என்றால் மோசடி மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் பிரகாஷ்ராஜ்   தெரிவித்துள்ளார்  இவரது பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்