undefined

  2வது நாளாக பிரசாந்த் கிஷோர் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

 


நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களமிறங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தவெக  தலைவர் விஜய்  தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்காக அவர் பணிபுரிய இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழக வெற்றிக்கழகம் 2026 தேர்தலை நோக்கி பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் பிரஷாந்த் கிஷோருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இன்று 2 வது நாளாக ஆலோசனை நடைபெறுகிறது.  தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி இவர்களுடன்  கட்சியின் சிறப்பு ஆலோசகராக செயல்பட உள்ள பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!