"காவல்துறையில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்" - பிரேமலதா கோரிக்கை!
Sep 3, 2026, 18:50 IST
காவல்துறையில் திருநங்கைகளைப் பணியமர்த்துவதுடன், காவல்துறையினரின் அடிப்படை வசதிகள் மற்றும் நலன்களைப் பேணிக்காக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தைரியமிக்க திருநங்கைகளைச் சிங்கப்பெண் அதிரடிப்படையிலும் (Singappen Commando Force), காவல் நிலையங்களிலும் கூடுதல் காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வெயிலிலும் மழையிலும் நின்று பணியாற்றும் போக்குவரத்துக் காவலர்களுக்கு முறையான உணவு மற்றும் கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றார்.
காவல்துறையினருக்குக் கண்டிப்பாக 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களை அரசு விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.