தாயை இழந்த பச்சிளம் குழந்தைக்கு அக்காவின் அரவணைப்பு... அழுகையை நிறுத்திய நெகிழ்ச்சி வீடியோ!
பிறந்த சில நொடிகளிலேயே தாயின் அரவணைப்பை இழந்த குறைமாதக் குழந்தை, தனது மூத்த சகோதரியின் அரவணைப்பில் அமைதியான சம்பவம் இணையத்தில் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.
ప్రసవిస్తూ తల్లి మృతి.. వెక్కి వెక్కి ఏడ్చినా శిశువు తల్లి ప్రసవిస్తూ కన్నుమూయడంతో ఆ అకాల శిశువు ఒంటరిగా మిగిలిపోయాడు. పుట్టినప్పటి నుండి ఏడుపు ఆపకపోవడంతో, వైద్యులు ఆ పసికందును తన అక్క గుండెలపై పడుకోబెట్టారు. వెంటనే ఆ చిన్నారి ఏడుపు ఆపి ప్రశాంతంగా నిద్రపోయాడు. అమ్మను కోల్పోయిన ఆ పసికందుకు అక్క ఒడినే అత్యంత సురక్షితమైన నీడగా మారిన ఈ దృశ్యం, సోదరప్రేమకు నిలువెత్తు నిదర్శనంగా నిలిచి అందరినీ కలచివేసింది. #TeluguNews #HeartWarming #SiblingLove #TrendingNews #EmotionalStory #RestInPeace
— Vijay Kumar (@vijay_kuma55909) November 12, 2026
பிரசவத்தின்போது குழந்தையின் தாய் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. குறைமாதத்தில் பிறந்த அந்தக் குழந்தை, பிறந்தது முதல் தொடர்ந்து அழுதுகொண்டிருந்துள்ளது. குழந்தையை அமைதிப்படுத்த மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது குழந்தையின் மூத்த சகோதரியின் மார்பில், அதை மென்மையாகப் படுக்க வைத்துள்ளனர். சகோதரியின் அரவணைப்பும் உடல் வெப்பமும் கிடைத்த சில நொடிகளிலேயே குழந்தை அழுகையை நிறுத்தி அமைதியாகியுள்ளது. பின்னர் நிம்மதியாக உறங்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான தருணம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தாயை இழந்த பச்சிளம் குழந்தைக்கு, அந்த நேரத்தில் அக்காவின் அரவணைப்பு ஆறுதலாக அமைந்த காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.குழந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்த இடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.