இன்று ரஃபேல் போர் விமானத்தில் பறக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
நாட்டின் முதல் குடிமகளும், ஜனாதிபதியுமான திரவுபதி முர்மு இன்று ரஃபேல் போர் விமானத்தில் பறக்க இருக்கிறார்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து இந்த பறப்பில் ஜனாதிபதி பங்கேற்கிறார். பிரெஞ்சு நிறுவனம் ‘டசால்ட் ஏவியேஷன்’ தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள் 2020ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய விமானப்படை சேவையில் இணைக்கப்பட்டன.
இந்த ரஃபேல் விமானங்கள், சமீபத்திய ஆப்பரேஷன் ‘சிந்தூர்’ நடவடிக்கையின் போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டன.
இது முதல் முறை அல்ல. கடந்த 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பறந்திருந்தார். இதற்கு முன் முன்னாள் ஜனாதிபதிகள் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோரும் இதே வகை போர் விமானங்களில் பறந்திருந்தனர்.
இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய ஜனாதிபதியாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் சிறப்பு சாதனை படைக்கும் பெண்மணியாகவும் திரவுபதி முர்மு இன்று பதிவாக இருக்கிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!