ரூ.5,700 கோடி செலவில் தங்கத்தால் ஜொலிக்கும் வெள்ளை மாளிகை - புகைப்படங்களை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்!

 

அமெரிக்காவில் சுமார் ரூ.5,700 கோடி செலவில் மிக ஆடம்பரமாக உருவாக்கப்பட்டு வரும் வெள்ளை மாளிகையின் 'Ballroom' உட்புறத் தோற்றத்தின் புகைப்படங்களை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

மக்கள் பணத்தை வீணடிப்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துவரும் போதிலும், தங்கத் தூண்களுடன் ஜொலிக்கும் இம்மாளிகையின் பிரம்மாண்டமான புகைப்படங்களை டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த ஆடம்பரக் கட்டடப் பணிகள் அமெரிக்க அரசியல் களத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.