ஓணம் கொண்டாட்டம் - பூக்கள் விலை பலமடங்கு உயர்வு!

 

கேரளாவில் பாரம்பரிய ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடங்கி, வீடுகளில் பொதுமக்கள் அத்தப்பூ கோலமிட ஆரம்பித்துள்ள நிலையில், சந்தைகளில் பூக்களின் தேவை அதிகரிப்பால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆரஞ்சு நிற செண்டுமல்லி கிலோ ரூ.150 முதல் ரூ.300 வரையிலும், மஞ்சள் நிற செண்டுமல்லி ரூ.150 முதல் ரூ.250 வரையிலும் விற்பனையாகிறது. வெள்ளை நிற செவ்வந்தி கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரையிலும், நீல நிற செவ்வந்தி ரூ.400 முதல் ரூ.700 வரையிலும் விற்கப்படுகிறது. வாடாமல்லி கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையிலும், அரளிப்பூ கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சிவப்பு ரோஜா கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்கப்படும் நிலையில், அலங்காரத்திற்குப் பயன்படும் பன்னீர் இலை ஒரு கட்டு ரூ.110 (கிலோ ரூ.200) வரை விற்பனையாகிறது.

ஓணம் தேவைக்காகப் பெங்களூரு, கோயம்புத்தூர், மைசூர் மற்றும் தோவாளை உள்ளிட்ட இடங்களில் இருந்து டன் கணக்கில் பூக்கள் கேரள மார்க்கெட்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

திருவோண நாள் நெருங்க நெருங்கப் பூக்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.