பழனி முருகன் கோயிலில் பிரசாதங்கள் விலை உயர்வு... நவம்பர் 1 முதல் நடைமுறை!

 

திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விற்கப்படும் பிரசாதங்களின் விலையை உயர்த்தித் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொருட்களின் விலை உயர்வு மற்றும் தயாரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

₹15-க்கு விற்கப்பட்டு வந்த முறுக்கின் விலை ₹10 உயர்த்தப்பட்டு இனி ₹25 ஆக விற்பனை செய்யப்படும். லட்டு, அதிரசம், தேன் தினைமாவு ஆகியவை தலா ₹5 உயர்த்தப்பட்டு இனி ₹20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை ஆகியவற்றின் விலையும் தலா ₹5 உயர்த்தப்பட்டு இனி ₹20 ஆக விற்பனை செய்யப்படும்.

இந்த புதிய கட்டண உயர்வு வரும் நவம்பர் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. பழனிக்கு வரும் பக்தர்களிடையே இந்த விலை உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன.