பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் உயரிய விருது வழங்கி கெளரவம்.. 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
உஸ்பெகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டிற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘ஒலிய தராஜலி தோஸ்த்லிக்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்சியோயெவ்வைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் நீண்ட கால யுரேனியம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
உஸ்பெகிஸ்தான் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொள்ளும் பிரதமர் மோடி, தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகக் கிர்கிஸ்தான் (பிஷ்கெக்) புறப்பட்டுச் செல்கிறார்.