undefined

பிரதமர் மோடி வருகை... சென்னை, தஞ்சை, மதுரை வரையில் பாதுகாப்பு அதிகரிப்பு... ட்ரோன்களுக்குத் தடை!

 

பிரதமர் மோடி நேற்றிரவு சென்னை வந்திருக்கும் நிலையில், இன்று காலை தஞ்சை வழியாக மதுரை செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சென்னை துவங்கி மதுரை வரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று திருப்பரங்குன்றம் செல்கிறார்.

பிரதமர் வந்து இறங்கும் விமான நிலையப் பகுதி, பிரதமர் தங்கும் ஆளுநர் மாளிகை மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்கள் ஆகிய பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக "சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களிலும் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஏற்பாடுகளைத் தவிர்த்து, தனியார் அல்லது தனிநபர்கள் எவரும் ட்ரோன்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

ஏற்கனவே பிப்ரவரி 19ம் தேதி முதல் ஏப்ரல் 19 வரை சென்னையில் ட்ரோன்கள், பாரா கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை இயக்கத் தடை விதிக்கப்பட்ட ஆணை நடைமுறையில் உள்ளது. தற்போது பிரதமரின் வருகையையொட்டி, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகளில் இந்தத் தடை இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் பயண வழித்தடங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.