undefined

இளவரசர் ஆண்ட்ரூவின் அரசுப் பட்டங்கள் பறிப்பு... வீட்டை காலி செய்ய மன்னர் சார்லஸ் உத்தரவு!

 

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில், மன்னர் சார்லஸ் தனது தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரசுப் பட்டங்களையும் சலுகைகளையும் பறிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், இளவரசர் ஆண்ட்ரூ (65) மீது தன் இளமைக்காலத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் அளித்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை ஆண்ட்ரூ மறுத்தபோதிலும், பின்னர் ஜியூப்ரே தற்கொலை செய்து கொண்டது வழக்கை மேலும் தீவிரப்படுத்தியது.

இதையடுத்து, “அரசுப் பட்டங்களைத் துறக்கிறேன்; என்மீது உள்ள குற்றச்சாட்டுகள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளன,” என ஆண்ட்ரூ முன்பே அறிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் மன்னர் சார்லஸ், அவருக்கு எதிராக கடுமையான நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், “இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து பட்டங்களும் கவுரவங்களும் பறிக்கப்படுகின்றன. இனி அவர் ‘ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர்’ என்று மட்டுமே அழைக்கப்படுவார். வின்ட்சர் இல்லத்தை உடனடியாக காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரீஸ் ஹாம் எஸ்டேட்டில் தனியார் தங்குமிடத்துக்கு மாற்றப்பட உள்ளார். அவரிடமிருந்து யார்க் டியூக் பட்டமும் ராணுவ மரியாதைகளும் நீக்கப்பட்டுள்ளன.

ஒருகாலத்தில் துணிச்சலான கடற்படை அதிகாரியாக பணியாற்றிய ஆண்ட்ரூ, 1980களில் அர்ஜென்டினாவுடனான பால்க்லாந்து போரிலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னர் சார்லசின் இந்த கடுமையான உத்தரவால், இங்கிலாந்து அரசவையில் புதிய அதிர்வலை எழுந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?