பிரபல கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடன் நிச்சயதார்த்தம் முறிவு - காதலி அக்ரிதி அகர்வால் அறிவிப்பு!

 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவுடனான காதல் உறவையும், நிச்சயதார்த்தத்தையும் முறித்துக் கொள்வதாக அவரது காதலி அக்ரிதி அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கும் அக்ரிதி அகர்வாலுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது இருவரும் தங்களது உறவை முறித்துக் கொண்டுள்ளனர்.

தங்களின் எதிர்காலப் பாதைகளும், வாழ்க்கை இலக்குகளும் முற்றிலும் வெவ்வேறாக அமைந்திருப்பதை உணர்ந்துகொண்டதாகவும், அதனால் இருவரும் இணைந்திருப்பதை விட தனித்தனியாகப் பயணிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அக்ரிதி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவினால், இவர்களது வரவிருந்த திருமணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.